Loading...
 

கிளப் உருவாக்கம் - ஃபவுண்டிங் குழுவை உருவாக்குவது

 

வருங்கால உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

 

உங்கள் கிளப்பில் உறுப்பினர்களாக சேர விரும்பும் அல்லது உங்கள் கிளப்பிற்கு உதவியாக இருக்கக்கூடிய நபர்களைத் தொடர்புக் கொள்ளுங்கள்.

புதிய கிளப் ஒன்றை உருவாக்க குறைந்தபட்சம் 8 உறுப்பினர்கள் தேவை, ஆனால் உங்கள் கிளப் நிலையானதாக இருக்க வேண்டுமென்றால், அதில் 10 முதல் 15 நபர்கள் இருப்பது நல்லது. உங்கள் கிளப்பில் சேருவதற்கு நபர்கள் ஏற்கனவே தயாராக இருந்தால், சிறப்பு! நீங்கள் நேரடியாக வழிமுறை 7 க்குச் செல்லலாம், Agora -வில் புதிய உறுப்பினர்களாக சேருவதற்கு அவர்கள் பட்டய உறுப்பினர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு புதிய கிளப்பில் சேரும் அனைத்து உறுப்பினர்களும் மற்ற கிளப்புகளிலும் இருப்பது முற்றிலும் சாத்தியமே:

Membership

 

கிளப்பிற்கான உறுப்பினர்களை எவ்வாறு சேர்ப்பது என்பது குறித்த சில சாத்தியமான யோசனைகள்:

  • Agora Speakers கிளப் ஒன்றை அராம்பிக்கவிருக்கும் உங்கள் எண்ணம் குறித்தும், Agora என்றால் என்ன என்பது குறித்தும், மேலும் அந்த கிளப் என்னென்ன பணிகளை செய்யும் என்பது குறித்தும் உங்கள் சமூக ஊடக கணக்குகளில் வெளியிடவும்.
  • நீங்கள் எடுக்கும் முன்முயற்சி குறித்து உங்களுடன் தொடர்பில் இருக்கும் நபர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
  • கிளப்பில் சேருவதற்கான ஆர்வம் இருக்கக்கூடிய உங்கள் நண்பர்கள் அல்லது நீங்கள் ஆரம்பிக்கவிருக்கும் கிளப்பை போன்ற அமைப்புகளில் இருக்கும்  உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
  • நீங்கள் கலந்து கொள்ளும் சந்திப்புகளில் Agora Speakers குறித்து பேசி செய்தியை பரப்புங்கள்; பட்டய சந்திப்பிற்கு பங்கேற்பாளர்களை அழைத்திடுங்கள்.
  • சமூக ஊடகங்களில் நீங்கள் சேர்ந்திருக்கும் குழுக்களில் Agora மற்றும் உங்கள் கிளப்பைப் பற்றி பதிவிட்டு செய்தியை தெரியப்படுத்துங்கள். குழுவானது வலுவான தணிக்கைக்கு உட்பட்டதாக இருந்தால், பங்கேற்கும் நபர்களின் கருத்துக்களை நீங்கள் கவனித்து, உங்கள் முன்முயற்சிக்கு பதிலளிக்கக்கூடியவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பிவிட்டு, நீங்கள் செய்தி அனுப்பியுள்ளீர்கள் என்று அவர்களுக்கு கருத்து பிரிவில் பொதுவாக தெரிவிப்பது பரிந்துரைக்கப்படுகிறது, அவ்வாறு பொதுவில் தெரிவிக்கும்போது அவர்களின் பெயரை குறிப்பிடுவது அவர்களின் கவனத்தைப் பெறுவதற்கு உதவும். அதற்கு பின்பான செய்தி பரிமாற்றங்களை தனிப்பட்ட முறையில் செய்துக் கொள்ளலாம்.
  • பிற அமைப்புகளில் தங்களது உறுப்பினருரிமையை புதுப்பிக்காத உறுப்பினர்களிடம் பேசலாம்.
  • மீட் அப் அல்லது இன்டர்நேஷன்ஸ் போன்ற தளங்களில் நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகளை பதிவிடலாம்.
  • உங்கள் நாட்டில் உள்ள Agora முகநூல் குழுவில் கிளப் ஆரம்பிக்கும் உங்கள் நோக்கத்தை அறிவிக்கவும் அல்லது உங்கள் நாட்டில் Agora முகநூல் குழு ஏதும் இல்லை என்றால் Agora Speakers International குழுவில் அறிவிக்கவும்.
  • "பொது சொற்பொழிவாற்றுவது குறித்து கற்றுக் கொள்வது", "பொது சொற்பொழிவாற்றுவது குறித்த பயிற்சி", "பொது சொற்பொழிவாற்றுவதன் பயம்", அல்லது இதே போன்ற வார்த்தை கோவைகளின் தேடல்களை இலக்காகக் கொண்டு, புவியியல் வரம்பை (அநேகமாக, அது உங்கள் நகரமாக இருக்கும்) முடிந்தவரை துல்லியமாக அமைத்து கூகுள் ஆட்வேர்ட்ஸ் அல்லது முகநூல் கேம்பெயினை (பிரச்சாரத்தை) உருவாக்கவும். 
  • பல்கலைக்கழகங்கள், புத்தகக் கடைகள், நூலகங்கள் போன்றவற்றில் ஃப்ளையர்களை (துண்டு பிரசுரங்களை) வைத்திடுங்கள்.
  • பொது சொற்பொழிவு மற்றும் தலைமைத்துவம் போன்றவற்றுக்கு உங்கள் பகுதியில் உள்ள வலைப்பதிவுகள், தளங்கள், மன்றங்கள் மற்றும் குழுக்களை கூகுள் செய்து, அதில் அறிவிப்பை பதிவிடுங்கள். ஸ்பேம் என்று லேபிள் செய்யப்படுவதைத் தவிர்க்க, Agora Speakers என்பது இலாப நோக்கற்ற அமைப்பு என்பதையும், அதில் கட்டணம் முற்றிலும் குறைவு என்பதையும் தெளிப்படுத்திடுங்கள்.
  • உள்ளூர் கலாச்சார வழிகாட்டி அல்லது செய்தித்தாளில் இலவசமாக விளம்பரம் செய்யவும்.
  • உள்ளூர் செய்தித்தாள்கள் மற்றும் வானொலி நிலையங்களுக்கு செய்திக்குறிப்பை எழுதி அனுப்பவும்.

 

கூடுதல் யோசனைகளைப் பெற, உங்கள் பகுதியில் உள்ள பிற அமைப்பினுடைய கிளப்புகளின் பெயரை கூகுள் செய்து, அவர்கள் எங்கே விளம்பரம் செய்துள்ளார்கள் என்பதை பார்த்து, பின்னர் அதே சேனல்களைப் பயன்படுத்தவும்.

Agora என்றால் என்ன என்பதை விளக்குவது

உறுப்பினர்களை சேர்க்கும்போது, Agora என்பது எதைப் பற்றியது என்பதை நீங்கள் விளக்க வேண்டும்.

நமது அமைப்பைப் பற்றி இருக்கின்ற அனைத்து தகவல்களையும் விளக்கக்காட்சிகளையும் மீண்டும் ஒரு முறை பார்வையிடுவது நல்லது, அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தகவல்தொடர்புகளில் பொருத்தமான ஆவணங்களை நீங்கள் சேர்க்கலாம் மற்றும் Agora Speakers கிளப்பில் சேருவதன் முக்கிய பலன்களை முன்னிலைப்படுத்தி தெரிவிக்கலாம். இந்த மிகச் சுருக்கமான விளக்கக்காட்சியைப் பகிர்ந்துக் கொள்வது நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும். 

Agora குறித்த இந்த ஒரு நிமிட விளக்கத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

பின்தொடர்புகள்

ஆர்வமிக்க நபர்களிடமிருந்து மின்னஞ்சல்கள் அல்லது செய்திகள் வர ஆரம்பித்ததும், அதன் பிறகு Agora உடைய பணி என்ன, கிளப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன, மற்றும் உறுப்பினர்கள் Agora வில் பெறும் அனுபவத்திலிருந்து எவ்வாறு பயனடைகிறார்கள் என்பது குறித்து நீங்கள் விளக்கலாம்.

நீங்கள் Agora உடைய அதிகாரப்பூர்வ விளக்கக்காட்சிகளை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது அவற்றை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கலாம். இவற்றை "விளக்கக்காட்சிகள்" என்ற பகுதியின் கீழ் இருக்கும் பிராண்டிங் போர்ட்டலில் காணலாம்.

 

உறுப்பினர் பதிவு

 

கல்வி ரீதியான மெட்டீரியல்கள் உட்பட Agora உடைய அமைப்புகளை அணுகுவதற்கு கிளப்பின் அனைத்து உறுப்பினர்களும் Agora ஆன்லைன் தளத்தின் பயனர்களாக பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு இந்த இணைப்பை சுட்டிக்காட்டி அனுப்புவதன் மூலம் அவர்கள் எளிதாக பதிவு செய்யலாம்.


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 15:00:38 CET by agora.